
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு மொழி பாடம் கட்டாய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐபி மற்றும் பிற வாரிய இணைப்பு பள்ளிகளில் தெலுங்கு மொழியை கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கூட்ட ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அரசு வெளியிட்ட அறிக்கையில், வரும் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.