
ரயில்வே ஆட்சேர்ப்பு குழு (RRB) – குரூப் D தேர்வுக்கான விண்ணப்பம் இன்று கடைசி நாள்!
ரயில்வே ஆட்சேர்ப்பு குழு (RRB) நடத்தும் குரூப் D பணியிடங்களுக்கான தேர்விற்கான விண்ணப்ப பதிவு இன்று (மார்ச் 1) முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளம் (rrbapply.gov.in) மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1, 2025
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: மார்ச் 3, 2025
விவர திருத்த (Correction) விண்டோ: மார்ச் 4 – மார்ச் 13, 2025
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
தகுதி விவரங்கள்:
கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் – 18 வயது
அதிகபட்சம் – 36 வயது (ஜனவரி 1, 2025 நிலவரப்படி கணக்கீடு செய்யப்படும்)
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வயது தளர்வு உண்டு.
சம்பள விவரங்கள்:
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.18,000 மாத சம்பளமாக பெறுவார்கள்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்:
பொது (General) / ஓபிசி (OBC) / பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் (EWS): ரூ.500 (பரீட்சைக்கு பின்பு ரூ.400 திருப்பித் தரப்படும்)
SC/ST/PwD மற்றும் அனைத்து பெண்கள்: ரூ.250 (முழுவதும் திருப்பித் தரப்படும்)
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்: rrbapply.gov.in
“Apply” இணைப்பை கிளிக் செய்யவும்.
புதிய கணக்கு உருவாக்கி, உள்நுழையவும்.
தேவையான தகவல்களை நிரப்பி, ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடைசி நேர இணைய தள பிரச்சனைகளை தவிர்க்க உடனே விண்ணப்பிக்கவும்! மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.