பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் எடின் ரோஸ். இவர் பிக் பாஸ் சீசன் 18 போட்டியாளரும் கூட. நடிகை எடின் ரோஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்‌. இவர் தற்போது நடிகை நயன்தாராவின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நடிகை எடின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய தந்தை இறந்துவிட்டதாக வேதனையுடன் அவர் பதிவிட்டுள்ளார். பிறந்தது முதல் உங்கள் கைகளில் இருந்த நான் இந்த பிரிவை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறேன் என்பது தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.