
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் தற்போது Mrs @ Mr திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பாக தன்ராஜ் என்பவர் நடிகை வனிதா மீது செக் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அதாவது சாட்டிலைட் உரிமைக்காக 40 லட்ச ரூபாய் செக் கொடுத்து வனிதா ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் நடிகை வனிதா அவர் யார் என்று தனக்கு தெரியாது எனவும் தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி உள்ளனர் எனவும் சென்னை கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்துள்ளார்.