இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதுடன், திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். பியார் பிரேமம் காதல், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படங்களையும்  தயாரித்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஸ்வீட்ஹார்ட்”. இந்த படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்  எழுதி இயக்கும் இப்படத்தில் கோபிகா ரமேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

யுவன்ஷாங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் ஸ்வீட் ஹார்ட் படம் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடந்தது. இதில் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், “ஸ்வீட்ஹார்ட்” பிரமாண்டமாக தயாராக இருக்கிறது. இது இயக்குனர் ஸ்வீனித்தின் கனவு. இவரை போன்ற ஏராளமான புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு” என்று பேசி உள்ளார்.