சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஒரு இளம்பெண்ணுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஒரு சிலர் காரில் வந்து இளம்பெண்ணை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நெடுஞ்சாலையில் காரை மடக்கி பிடித்து இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.