
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இதே போல இலுப்பைகுடியிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்த இரண்டு பள்ளிகளிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என சர்ச்சையான நிலையில் இரண்டு பள்ளிகளிலும் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்கள் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.