அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டிப்பாக திமுக கூட்டணி உடையும் என்றும் தற்போது உள்ள கள நிலவரப்படி அந்த கூட்டணி சிதறும் நிலையில் தான் இருக்கிறது என்றும் கூறினார். அதோடு 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கண்டிப்பாக திமுக கூட்டணி உடைந்து விடும் என்றார். இதற்கு தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணி உடையும் என்பது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அது நிறைவேறாது என்பது அவருக்கே தெரியும். ஜெயக்குமாரின் ஆசை கண்டிப்பாக நிறைவேறாது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசுவோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனை பற்றி மட்டும் தான் பேசுவோம். மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் என்பது மிகவும் முக்கியமானது. அனைத்து கட்சி கூட்டத்தை எதிர்ப்பவர்களின் கருத்து என்பது ஏற்கத்தக்கதாக அல்ல. மேலும் ஹிந்தியை படிக்க வேண்டும் என்று பாஜகவுக்கு ஆதரவாக பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக என்று கூறினார்.