இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சோனு சூட். இவர் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைபயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர்  1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமான இவர் நெஞ்சினிலே, ஒஸ்தி, தேவி,மஜ்னு, ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் நடித்த இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

தற்போது இவர் சென்னையில் உள்ள ஒரு சாலையோர கடையில் தோசை சுட்டு வியாபாரம் செய்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சென்னைக்கு சென்ற இவர் சாலையோரத்தில் இருந்த ஒரு கடைக்கு சென்று அந்த கடையின் உரிமையாளரான சாந்தி என்ற பெண்ணிடம் ஒரு தட்டில் 3 இட்லிகள்,2 வடை எவ்வளவு? என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் 35 ரூபாய் என்று சொல்கிறார். அதற்கு அவர் விளையாட்டாக விலையை குறைப்பீங்களா? என்று கேட்டுக்கொண்டே அங்குள்ள தோசை கல்லில் மாவு ஊற்றி தோசை சுட்டுக்கொண்டு இந்த தோசையின் விலை என்ன? என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.

அதற்கு கடையின் உரிமையாளரான சாந்தி சாதாரண தோசையின் விலை 15 ரூபாய் என்று கூறினார். அதனை கேட்டு சோனு சூட் நான் செய்வதால் இது 30 ரூபாய் என்று சிரித்துக் கொண்டே தோசை சுட்டு தட்டில் வைத்தார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராமில் “மேரி இட்லி சாம்பார் கீ துகான்” என்று பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.