
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் நிறுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பாவிடம் இருந்து உறுதியான ஆதரவை பெற்றுள்ளோம். பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்பதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
நன்றியை உணராத நாளில்லை. இது நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நன்றி உணர்வு. உக்ரைனில் நமது எதிர் தாக்குதல் என்பது எங்கள் கூட்டாளிகள் எங்களுக்காகவும் அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காகவும் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்தது. எங்களுக்கு தேவை அமைதி. முடிவில்லாத போர் அல்ல. அதனால்தான் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இதற்கு முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்