திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் எண்ணும் பணி தொடங்கியது. அந்த வகையில் முதல் நாளில் 3 கோடியே 52 லட்சத்து 55 ஆயிரத்து 845 பணம், 229 கிராம் தங்கம், 1.750 கிலோ வெள்ளி உண்டியல் காணிக்கையாக எண்ணப்பட்டுள்ளது. நாளையும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடரும்.