
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து இருக்கிறது. அதேபோல இந்த போட்டியை வென்று பைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியா அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டியானது இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அரையிறுதி போட்டி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், துபாய் போன்ற மெதுவான மைதானங்களில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அதையே தொடர்வார் என்று நான் நினைக்கிறேன். இந்திய சுழற் பந்து வீச்சை அடித்து நொறுக்க சில திட்டங்களை வைத்துள்ளோம். இதுபோல் பெரிய போட்டிகளில் ஆடும்போது நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும்” என்று பேசியுள்ளார்.