தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பாலியல் புகார் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பிரச்சினைகள் இருக்கிறது. இது தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் நேற்று தென்காசி மாவட்டத்தில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி பேருந்தில் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அந்த குழந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு பள்ளி பேருந்தில் திரும்பிய போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அந்த பாலியல் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அதாவது பள்ளி பேருந்தின்  கிளீனர் முருகன் (45) தான் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.