
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அன்னா கிராமம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாஷ் போர்ஹடே என்பவர் வசித்து வருகிறார் . விவசாயியான இவர் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பகவத் சுதாம் டாவூத் மற்றும் அவரது சகோதரர் நவ்நாத் இருவரும் போர்ஹடேவிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் முன் விரோதத்தின் காரணமாக அவரை தாக்கினர்.
அந்த வகையில் இரும்பு கம்பியை அடுப்பில் சூடாக்கி அதன் மூலம் அவரை அடித்து கொடூரமாக சித்திரவதை செய்தனர். அதோடு அந்த கம்பியை கொண்டு அவரின் உடலில் தனிப்பட்ட உறுப்பு பகுதியில் அடித்து துன்புறுத்தினர். இதனை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. மாறாக இந்த சம்பவத்தை அங்கிருந்த மக்கள் அனைவரும் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியான பகவத் சுதாம் டாவூத் மற்றும் அவரது சகோதரர் நவ்நாத் ஐ தேடிவந்த நிலையில் பகவத் சுதாம் தாவூத் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
तापलेला रॉड पार्श्वभागात घुसवला, जालन्यातील तो संतापजनक व्हिडीओ…#LokmatNews #maharashtra #jalna #CrimeNews #video #viralvideo pic.twitter.com/sO4L3FsydX
— Lokmat (@lokmat) March 5, 2025