PM இன்டெர்ன்ஷிப் மூலமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் PMIS அதிகாரப்பூர்வ போர்ட்டலில் PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 க்கான ஆன்லைன் பதிவு படிவத்தைத் திறந்துள்ளது. இதில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் pminternship.mca.gov.in ஐப் பார்வையிடலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 12ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.