
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்தான் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சில படங்களில் சொதப்பினாலும் அதன் பிறகு பிக்கப் ஆனார். 1999 ஆம் வருடம் ஜோடி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு மௌனம் பேசியதே, லேசா லேசா படங்களில் நடித்த இவரின் மார்க்கெட் 2003 ஆம் வருடம் விக்ரமோடு இணைந்து நடித்த சாமி படத்தின் மூலமாக பிக்கப் ஆனது. அதன் பிறகு கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ., கோட் என பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது.
இப்படி பல முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இந்த நிலையில் இவர் குறித்து நடிகர் ராதாரவி பேசுகையில், ஒரு சிறிய ஒரு படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க வந்தார் திரிஷா. ஆனால் அன்று கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. அதனால் இயக்குனர் த்ரிஷா நன்றாக இருக்கிறார் என்று அவரை நடிக்க செலக்ட் செய்தார்.
பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள் ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்று அது போல தான் த்ரிஷா வாழ்க்கையும் மாறியது. இன்று தன்னுடைய திறமையால் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் . அன்று அவருக்கு எதிர்பாராத விதமாக தான் சினிமாவில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியுள்ளார்.