பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை ஐசிசி விதித்துள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பாக வெறும் ஏழு முறை தான் பயிற்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் சிஎஸ்கே போன்ற அணிகள் தங்களுடைய சொந்த மைதானத்திலேயே பயிற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இனி கை இல்லாத ஜெர்சியை பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வீரர்கள் அணிந்து வரக்கூடாது என்றும், ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்கள் மற்றும் பயிற்சி நாட்களில் வீரர்களுடைய குடும்பத்தினர்கள் ட்ரெஸ்ஸிங் அறைக்கு செல்வதற்கும் பிசிசிஐ தடை விதித்துள்ளது. மேலும் பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு செல்லும்போது அணி நிர்வாகத்தின் பேருந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.