ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் அதற்கான பயிற்சியை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் இந்த அணியின் ஹோம் போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள்  ஆர்வம்  காட்டுவது வழக்கம்.

இதனால் ஒருவர் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியை அந்த அணி தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.