முகமது ஷமி ரமலான் நோன்பு கடைப்பிடிக்காதது குறித்து விமர்சனம் இருந்தது. நோன்பு இருக்காததால் முகமது ஷாபி பாவி என்றும் அவர் பாவம் செய்துவிட்டார் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமா அத்தின் தேசிய தலைவர் கூறியிருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சமா முஹம்மது எதிர்ப்பு தெரிவித்தார். அதில், ரம்ஜான் மாதத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நாம் பயணம் செய்யும்போது நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முகமது ஷமி பயணம் செய்கிறார். அவர் தன்னுடைய சொந்த இடத்தில் இல்லை.

நீங்கள் ஒரு விளையாட்டு விளையாடும்போது நோன்பு இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. உங்களுடைய செயல்கள் தான் மிகவும் முக்கியம்.  இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான மதம் என்று கூறியுள்ளார். சுற்றுப்பயணத்தில் இருப்பவர்கள் நோன்பை தவிர்க்க குர்ரான் அனுமதிக்கிறது என்று ஷமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.