
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வீர கிஷோர்-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். இருவருமே மருத்துவர்கள். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை உயிரிழந்தது.
இதனையடுத்து இரவு 9 மணிக்கு விஜயலட்சுமியின் உடல்நலம் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரசவத்திற்கு பிறகு உடலின் உட்புற ரத்தப்போக்கு தான் இறப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.