
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்
அடித்த பந்து நியூசிலாந்தன் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி டைவ்வின் வலது தோள்பட்டையில் பட்டு காயம் ஏற்பட்டது.
இந்த போட்டியானது நேற்று முன்தினம் நடந்தது. இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியில் மேட் விளையாடுவது சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் இவரை விளையாட வைப்பதற்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.