
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் மகளிர் தினம் உருவானதற்கான பின்னணி பற்றி பார்ப்போம். அதாவது சர்வதேச பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும் அரசியல் துறைகளில் பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்காகவும், பாலின சமத்துவத்தை விரைவுபடுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏன் மார்ச் 8 அன்று மட்டுமே பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது?
இந்த தினம் ரஷ்யாவின் வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வுடன் தொடர்புள்ளது. கடந்த 1913 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 (ஜூலியன் நாட்காட்டியில்) ரஷ்ய பெண்கள் முதல்முறையாக உலகப் போருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தனர். இது கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச் 8 ஆகும்.
கடந்த 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று, ரஷ்ய பெண்கள் மீண்டும் போருக்கு எதிராகவும், உணவுக்குறைப்பிற்கு எதிராகவும், சார் நிக்கோலஸ் II-இன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் போராட்டம் நடத்தினர். இது ரஷ்யப் புரட்சிக்கு தூண்டுதலாக அமைந்து, சில நாட்களில் சார் நிக்கோலஸ் II பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, ரஷ்ய பெண்கள் வாக்குச்சீட்டு உரிமை பெற்றனர்.
மார்ச் 8 இன்றைக்கே பெண்கள் தினமாக எப்படிக் குறிக்கப்பட்டது?
கடந்த 1917 ரஷ்யப் புரட்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததை நினைவுகூர, ரஷ்ய தலைவராக இருந்த விலாடிமிர் லெனின் மார்ச் 8-ஐ சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தார். அதற்கு முன்னர், 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் முதல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவில், முதல் தேசிய பெண்கள் தினம் 1909 பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்பட்டது. முதன்முதலில், பெண்கள் தினத்திற்கான நிலையான தேதியில்லை; பொதுவாக பிப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் தொடக்கத்தில் கொண்டாடப்பட்டது.
1914 ஆம் ஆண்டு ஜெர்மனியில் மார்ச் 8 அன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், பல நாடுகளும் இந்த தேதியையே சர்வதேச பெண்கள் தினமாக ஏற்றுக்கொண்டன.
சர்வதேச பெண்கள் தினம் அரசு விடுமுறை தினமாக உள்ள நாடுகள்?
சில நாடுகளில், சர்வதேச பெண்கள் தினம் அரசு விடுமுறை தினமாக இருக்கிறது. அவை:
ஆப்கானிஸ்தான், அர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினா ஃபாசோ, கம்போடியா, கியூபா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்டவை.
இதில் பெண்களுக்கு மட்டும் விடுமுறை சீனா, மடகாஸ்கர், நேபாளம் ஆகிய நாடுகளில் விடுமுறை. அதன்பிறகு பெர்லின், ஜெர்மனி: கடந்த 2019ல் சர்வதேச பெண்கள் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தது.
சர்வதேச பெண்கள் தினத்தின் பிரதான நிறங்கள்?
ஊதா (Purple): நீதி, மரியாதையை குறிக்கும்.
பச்சை (Green): நம்பிக்கையை குறிக்கிறது.
வெள்ளை (White): தூய்மையை குறிக்கும், ஆனால் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவும் இருக்கிறது.
இந்த நிறங்கள் 1908-ல் UK-இல் உள்ள Women’s Social and Political Union (WSPU) அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டன.
“பாலின சமத்துவத்தை விரைவுபடுத்தும் நோக்கில், இந்த ஆண்டு பெண்கள் தினத்திற்கான தீம் – ‘Accelerate Action என்பது குறிப்பிடத்தக்கதாகும்.