
தர்மபுரி மாவட்டத்திலுள்ள போளைப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியினருக்கு நேதாஜி, அலெக்ஸாண்டர், மணிமாறன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் நேதாஜி(14) அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேதாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தாவின் வீட்டிற்கு சென்று புளிய மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு நேதாஜியின் கழுத்தை இறக்கியது. இதனால் மூச்சு திணறி நேதாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் நேதாஜியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நேதாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.