தமிழ்நாடு அரசு சாமானிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஜெனரேட்டர் மானியம் குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது இந்த திட்டத்தின் கீழ் 320 KVA திறன் வரை உள்ள ஜெனரேட்டரின் விலை 25% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும் புதிய அல்லது ஏற்கனவே திறக்கப்பட்ட அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் மானிய விலையில் ஜெனரேட்டர் நிறுவ வேண்டும் என்றால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பம் உள்ளவர்கள் https://www.msmeonline.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் அதிகபூர்வமான இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.