உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி இல்லாத நேரத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது அந்த நபரின் மனைவி தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 11 வயது மகள் வீட்டில் தன் தந்தையுடன் இருந்தார்.

அந்த சமயத்தில் பெற்ற மகள் என்று கூட நினைக்காமல் அந்த கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி வெளியே சொன்னால் விஷம் கொடுத்து கொலை செய்து விடுவேன் என்று அவர் தன் மகளை மிரட்டியுள்ளார். ஆனால் தன் தாய் வீட்டிற்கு வந்த பிறகு சிறுமி நடந்த விவரங்களை கூறி கதறி அழுதார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அந்த தந்தையை கைது செய்தனர்.