நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் ஜெசின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே துறைமுகத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த கிரேஸ் வீல்டி ராபா என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.