
சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது. நாய்கள் தான் தெருவை பாதுகாத்தன. ஆனால் இன்றைய காலத்தில் தெருநாய்களை மறந்து விட்டு கல்லால் அடிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.