
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி தற்போது துபாயில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெறுகிறது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 19.52 கோடி பரிசாக கிடைக்கும்.
அதன் பிறகு இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 9.76 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் அதாவது இந்தியா மற்றும் நியூசிலாந்து உட்பட அனைத்து அணிகளுக்கும் தலா 1.08 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். மேலும் தொடரின் ஒவ்வொரு வெற்றிக்கும் அதாவது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா 2.95 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.