துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 12வது டாஸ் தோல்வியையும் இது குறிக்கிறது . இந்த பின்னடைவு இருந்தபோதிலும், இந்திய பந்துவீச்சாளர்கள் களத்தில் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தை 50 ஓவர்களில் 251/7 ரன்களில் கட்டுப்படுத்தினர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மறுபுறம், நியூசிலாந்து அணிக்காக டேரில் மிட்செல் 63 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில்  இந்தியா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 252 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்யும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக தொடக்கம் கொடுத்தார்கள். இந்த நிலையில் கில் (31) மற்றும் கோலி (1) என அடுத்தடுத்து அவுட் ஆகி உள்ளனர்.