சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதியத. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தற்போது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பவுலிங்கில் தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரராக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கிய நிலையில் ‌ 15 ரன்களில் வில் வில் யங் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு 37 ரன்களில் ரச்சின் ரவீந்திரநாவும், 11 ரன்களில் வில்லியம்சனும் ஆட்டம் இழந்தனர். இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து அதிரடியாக பந்து வீசினர். அந்த அணியில் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிச்செல் 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சுப்மன் கில் பந்தை அடித்த போது அதனை பிலிப்ஸ் கேட்ச் பிடித்தார்.  முன்னதாக நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையே போட்டி நடைபெற்ற போது விராட் கோலியை இதே போன்று பறந்து சென்று ஒரு கேட்ச் பிடித்து தான் பிலிப்ஸ் அவுட் ஆக்கினார். மேலும் தற்போதும் அதே ஸ்டைலில் அவர் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கியுள்ளார்.

விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையில் 49 ஓவர்களில் இலக்கை எட்டியது. மேலும் இதனால் இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்யாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மூன்றாவது முறையாக வென்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இதற்கு முன்பு கடந்த 2002 ஆம் ஆண்டு இலங்கையுடன் கோப்பை பகிரப்பட்டது. தற்போது 2025 ஆம் ஆண்டு ரோகித் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் வைத்து தாண்டியா  ஆட்டம் ஆடி மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது‌.