
ஆந்திர மாநில முதல்வர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவர் சந்திரபாபு நாயுடு, மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, விஜயநகரம் தொகுதியைச் சேர்ந்த TDP நாடாளுமன்ற உறுப்பினர் கலிசெட்டி அப்பா நாயுடு, அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்திற்கு ஒரு பசுவும் கன்றும் பரிசாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகை முழுவதுமாக அவருடைய சம்பளத்திலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்பா நாயுடுவின் இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. TDP ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், இந்த அறிவிப்பை தங்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பகிர்ந்து வருகிறார்கள். இதை ஒரு புரட்சிகரமான முயற்சியாக பெண்கள் பாராட்டுவதாகவும், இதனால் குடும்ப வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் எனவும் TDP தலைவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த அறிவிப்பை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, விஜயநகரம் மாவட்டத்தில் ராஜீவ் விளையாட்டு மைதானத்தில் நடந்த கூட்டத்தில், அப்பா நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் மக்கள் தொகை குறையும் அபாயம் இருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். அவர், “முந்தைய காலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்தேன், ஆனால் இப்போது என் பார்வையை மாற்றி, மக்கள் தொகை மேலோங்க வேண்டும் எனப் பார்க்கிறேன். இந்தியாவின் ஜனநாயக ஆதாயத்தை சரியாக பயன்படுத்தினால், இந்தியாவும் இந்தியர்களும் உலகளவில் பெரும் சக்தியாக மாறலாம்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் தினத்தையொட்டி, ப்ரகாசம் மாவட்டம் மார்கபுரத்தில் நடந்த நிகழ்வில், ஒரு பெண் எத்தனை குழந்தை பெற்றாலும் அவருக்கு மாதவிடாய் விடுப்பை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், மகளிருக்கு குடும்ம் , வேலை ஆகியவற்றை சமன் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தனது ‘X’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.