
இன்றைய காலகட்டங்களில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அதன் பின்னால் வந்த ஓட்டுநர் புடவை பல்லு சக்கரத்தில் சிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை கொடுத்தார். ஆனால் அதனை அந்த பெண் தவறாக புரிந்து கொண்டு தன்னுடைய புடவையின் விலையை பெருமையுடன் கூறினார்.
அந்த ஓட்டுநர் பெண்ணிடம் “பாபி ஜி பல்லு! பாபி ஜி பல்லு!”என சத்தமிட்டு எச்சரிக்கை கொடுத்தார். காரணம் அந்த பெண்ணின் புடவை சக்கரத்தில் சிக்கவோ அல்லது சாலையில் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர் அவ்வாறு கூறினார். ஆனால் பைக் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண் அவர் கூறியதை உணராமல் தன்னுடைய புடவையை காட்டி விலை விலை 1500 என பெருமையோடு கூறினார். இந்நிலையில் அதிர்ச்சியுடன் கூடிய இந்த தருணம் அந்தப் பெண்ணின் பதிலில் நகைச்சுவையாக மாறியது. இந்தத் நிகழ்வு எச்சரிக்கை கொடுத்த ஓட்டுனரை மட்டுமல்லாமல் இணையதள பயனாளர்களையும், கோடிக்கணக்கான பார்வையாளர்களையும் சிரிக்க வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோ மிகவும் வைரலாகி இணையத்தில் கலகலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க