
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் ஷாம். அதன் பிறகு படங்களில் ஷாம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். நடிகர் ஷாம் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் அவருக்கு சகோதரராக நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஷாம், “ஒருசில மக்கள் விஜய் அண்ணா அரசியலுக்கு வந்த பிறகு அவரை மேடையில் ஒருவாட்டி பேச சொல்லுங்க. அவருக்கு பேச வராது.
அதுக்கப்புறம் பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்க என்று ஏதேதோ சொல்றாங்க. அவர் அமைதியா இருக்காரு அவ்வளவுதான். நம்ம ஊர்ல யாராவது கத்தி கத்தி பேசினால் அவங்க பயங்கரமான ஆளுங்க என்று நம்புகிற கெட்ட பழக்கம் இருக்கு. ஆனால் அப்படி கத்தி கத்தி பேசுபவர்கள் எல்லாம் விஜய் அண்ணாவோட அறிவுக்கு முன்னாடி பக்கத்துல கூட வர முடியாது. யார் யாரோ அவருக்கு அட்வைஸ் பண்ணும் போது எனக்கு காமெடியா தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.