நடிகர் ரஷ்மிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பான் இந்தியா நடிகையாக உருவாகியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. இவர் முதலில் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் மற்ற மொழிகளில் நடித்து உச்சத்துக்கு சென்றார். ஆனால் அவர் கர்நாடகாவையும் கன்னட மொழியையும் அவமதிப்பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இவருக்கு பலமுறை அழைப்பு சென்றும் அவர் வர முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் ராஷ்மிகாவுக்கு பாடம்  புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கன்னிகா பேசியிருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

மேலும் துணை அமைச்சராக டிகே சிவகுமாரும் ராஷ்மிகாவை தாக்கும் விதமாக பேசியிருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவின் குடவா சமூகத்தினர் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். குடகு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் இருந்து வந்து உழைப்பால் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். மேலும் நிகழ்ச்சிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதை வைத்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்டவருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.