
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் பாலசுப்பிரமணியம் சரஸ்வதியின் வீட்டிற்கு அருகே தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதில் பாலசுப்பிரமணியத்தின் மூத்த மகனான ஸ்ரீதர் மது குடிப்பது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானார். அதோடு சரிவர வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தன் தாய்க்கு உதவி செய்வதற்காக அதே பகுதியில் தன் தாயாரின் வீட்டின் அருகையே ஒரு வீடு பார்த்து அந்த வீட்டுக்கு பொருள்களை எடுத்துச் சென்றனர்.
அப்போது சரஸ்வதி பாலசுப்பிரமணியத்தை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார். அதோடு புதிய வீட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தில் ஸ்ரீதர் ஒரு அரிவாள் மனையை எடுத்து சரஸ்வதியை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக ராஜபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.