
விஜய் தற்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். படம் அக்டோபர் மாதம் அல்லது 2026 பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சினிமாவை விட்டு சென்றால் சினிமாவில் ஒரு வெற்றிடம் உருவாகும் என்று ஏற்கனவே பேச்சு எழுந்து வருகிறது. விஜய் ரசிகர்களும் இதனால் கவலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான சிங்கம் புலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அதாவது யார் இருந்தாலும் இல்லை என்றாலும் சினிமா நகர்ந்துகொண்டே இருக்கும். ஒருவர் சென்றுவிட்டால் இன்னொருவர் வருவார் என கூறி இருக்கிறார்