
புதுச்சேரியில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 600 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது தற்போது இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனுடன் சேர்த்து இனி 2 கிலோ இலவச கோதுமையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் இனி மாலை சிற்றுண்டி வழங்கப்படும். வாரத்தில் முட்டை மூன்று நாட்கள் மட்டும் வழங்கப்படும் நிலையில் இனி வாரம்தோறும் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.