கரூர் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியை ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று கோபாலின் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் மாணவி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவியை நந்தகோபால், அவரது தாய் கலா மற்றும் நண்பர்களுடன் இணைந்து மினி வேனில் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நந்தகோபாலின் பாட்டி பொன்னம்மாள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவியை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து நந்தகோபால், அவரது தாய் கலா (45), நண்பர்களான கருப்புசாமி(28), பழனிசாமி(42), சரவணன்(25) ஆகியோரை போலீசார் கைது செய்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.