
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் மகளான பிரின்சி உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி பிரின்சி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரின்சியை காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் பிரின்சி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரின்சியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.