தமிழ்நாடு பட்ஜெட்டின் புதிய இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் (பட்ஜெட்) புதிய இலச்சினையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய இலச்சினையில், வழக்கமாக பயன்படுத்தப்படும் ‘₹’ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ (ரூபாய்) குறியீடு  இடம் பெற்றுள்ளது. இந்த மாற்றம் தமிழக அரசின் தனித்துவத்தையும், மொழிசார் அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், பட்ஜெட்டிற்கான புதிய இலச்சினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களின் அம்சங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.