சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பலரும் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் இரவு நேரத்தில் சாலையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்த பெண்களை  நாய்கள் துரத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், இரவு நேரத்தில் ஒருவர் வீடியோ பதிவு செய்ய, இரண்டு பெண்கள் நடனமாடி கொண்டிருக்கின்றனர்.

அப்போது அருகில் இருந்த தெரு நாய்கள் திடீரென அவர்களை துரத்தத் தொடங்கின. இதனால் பயந்த பெண்கள் ஓடிச் செல்வதற்காக முயன்றபோது, அவர்கள் கீழே விழும் தருவாயில் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், இரவு நேரங்களில் பாதுகாப்பில்லாமல் வீடியோ எடுப்பது குறித்து இணையத்தில் விவாதம் நடைபெறுகிறது.