தூத்துக்குடி மாவட்டம் பி அண்ட் டி காலனி பகுதியில் தாழ்வான இடத்தில் மழை நீர் குட்டை போல தேங்கி கிடக்கிறது. கடந்த 7-ஆம் தேதி மதியம் இரண்டு குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது தூரம் நடந்து வந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தேங்கி இருந்த மழை நீர் குட்டையில் தவறி விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர் விரைந்து வந்து குட்டையில் குதித்து அந்த குழந்தையை பத்திரமாக மீட்டார். இதனையடுத்து குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த தாயிடம் வாலிபர் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.