
சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22 ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதன்படி கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் பங்கேற்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சரால் பங்கேற்க முடியவில்லை. இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளதால், என்னால் பங்கேற்க இயலவில்லை. கூட்டாட்சி கொள்கை மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் துணை நிற்கிறோம் என்று முதலமைச்சர் சித்ராமையா கடிதம் எழுதியுள்ளார்.