தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போது தயாராகி வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜயும் தயாராகி வருகிறார். நடிகர் விஜய் மொத்தமாக 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்த நிலையில் இதுவரை ஐந்து கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று ஆறாவது கட்டம் மற்றும் இறுதி கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நடிகர் விஜய் வெளியிட்டு வருகிறார்.

இது தொடர்பாக தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.அதாவது கடைசி நேரத்தில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 140 ஆக உயர்த்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய உதவியாளரும் முன்னாள் கார் ஓட்டுநருமான ராஜேந்திரன் என்பவரது மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அதன்படி தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக ராஜேந்திரனின் மகன் சபரிநாதனை நியமித்துள்ளார்.