மத்திய பிரதேச மாநிலம் ரீவா (Rewa) நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஒரு தெரு நாய் இறந்த குழந்தையை வாயில் கடித்து இழுத்துச் செல்வது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகப் பரவியதை தொடர்ந்து, உடனடியாக காவல்துறை விசாரணை ஆரம்பித்துள்ளது. வீடியோவில், நாய் நகரின் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்க, அதன் வாயில் இறந்து போன புதிதாக பிறந்த குழந்தை இருப்பதைப் பார்க்க முடிந்தது. இது சம்பந்தமாக அதிகாரிகள் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே இதுபோன்று அரசு மருத்துவமனையிலும் ஒரு இறந்த குழந்தையின் சிசுவை நாய் ஒன்று கவ்வி செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும் அதிகாரிகளும் உறுதி கொடுத்துள்ளனர்