
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என்று பாஜக சந்தேகம் கிளப்பியுள்ளது. அதாவது பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மன்மோகன் சிங் இறந்த போது நாடே துக்கத்தில் இருந்தது. அப்போது புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்காக ராகுல் காந்தி வியட்நாம் சென்றார் என்று கூறியிருந்தார். இதேபோன்று தற்போது பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தபோது ராகுல் காந்தி எதற்காக அடிக்கடி வியட் நாம் சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
புத்தாண்டு பண்டிகையின் போது வியட்நாம் சென்ற ராகுல் காந்தி கிட்டத்தட்ட 22 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்த நிலையில் ஹோலி பண்டிகையின் போதும் தற்போது அங்கு சென்றுள்ளதாக கேள்விப்பட்டேன். கடந்த 3 மாதங்களில் 2 முறை வியட்நாம் சென்றுள்ளார். தன்னுடைய சொந்த தொகுதிக்கு கூட செல்லாமல் அடிக்கடி வியட்நாம் செல்லும் ராகுல் காந்தி அந்த நாட்டின் மீதான தன்னுடைய சொந்த பாசத்தை கண்டிப்பாக கூறவேண்டும். மேலும் தொகுதியை விட வியட்நாமில் தான் அதிக நேரத்தை ராகுல் காந்தி செலவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.