தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது.  இந்த நிலையில் தமிழக அரசு 8997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சத்துணவு உதவியாளர்கள் பணியிடத்தில் நான்கு சதவீதம் வரை மாற்றித்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் கடந்த வருடம் மாத 3000 தொகுப்பூதியத்தில் சத்துணவு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது