
ஆந்திராவில் சந்திர கிஷோர்-ராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் சிறுவர்கள் இருவருக்கும் படிப்பு சரிவர வரவில்லை. அதாவது அவர்களின் கல்வி திறன் குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்திர கிஷோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில் தன் மகன்கள் படிப்பில் மந்தமாக இருந்தால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று கவலைப்பட்டுள்ளார்.
இந்த வேதனை ஒரு கட்டத்தில் கோபமாக மாறிய நிலையில் தன் மகன்கள் இருவரையும் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.