
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கல் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 12-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார். இந்த நிலையில் இறுதி சடங்கின் போது அவர் அணிந்திருந்த தங்க நகைகளை உறவினர்கள் கழற்றி உள்ளனர். அப்போது 5.75 பவுன் தங்க நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இது பற்றி விசாரித்த போது துக்க வீட்டிற்கு வந்தவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து முரசொலி மாறன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது உறவினரான கொழுந்து வேல் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது மாலை அணிவிக்கும் போது நைசாக நகையை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதனால் போலீசார் கொழுந்துவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.