
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் மாடலாக தன் கேரியரை தொடங்கிய நிலையில் அதன் பிறகு நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அதற்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சேரன் தன்னுடைய இடுப்பில் கை வைத்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுவார். அந்த வகையில் பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சையாக பதிவிட்டதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்த நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா மீதுன் பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசியுள்ளார். அதாவது ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சர் நாற்காலியில் மீரா மிதுனை உட்கார சொன்னார்களாம். மத்திய அரசுமுதலமைச்சர் நாற்காலியில் உட்காருமாறு சொன்ன நிலையில் நான் அப்படி உட்கார்ந்தால் ஒரு கட்டத்தில் சிக்கக்கூடும் என்பதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைசியில் ஒருவரை நான் கை காட்டினேன்.
இது எனக்கும் தெரியும் அவர்களுக்கு தெரியும். நான் இதைப் பற்றி வெளியே சொல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களே பேச வேண்டும் என்பதற்காக தான். ஆனால் நான் செய்த தவறு அப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்காராதது தான் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் மீரா மிதுனுக்கு மனநிலை சரியில்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். மேலும் அதிமுகவுக்கு வந்த சோதனையா என்றும் சிலர் நக்கலாக பதிவிட்டு வருகிறார்கள்.